என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நகைகள் மீட்பு"
- பணம்-நகைகள் இன்று கமிஷனர் அலுவலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.
- சரண்யா, பிரியா ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசார் 2 வழக்குகளில் 450 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 லட்சத்தும் மேல் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்த பணம்-நகைகள் இன்று கமிஷனர் அலுவலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பார்வையிட்டார்.
ஏற்கனவே போடப்பட்ட பழைய வழக்கில் 250 பவுன் நகைகளும் தற்போது போடப்பட்டுள்ள வழக்கில் 200 பவுன் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. தற்போது போடப்பட்டுள்ள வழக்கு சென்னையில் பருப்பு கம்பெனியில் கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்ட வழக்காகும். இந்த வழக்கில் சரண்யா, பிரியா ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திவ்யா என்ற கர்ப்பிணி பெண் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ. 30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர்.
- சஞ்சீவி கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கோவை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 42). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கியிருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர்.
கடந்த 8-ந் தேதி சஞ்சீவி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரிக்கு சென்றார். பின்னர் அங்கு உள்ள ஓட்டலில் தங்கி இருந்து நிலம் வாங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார். 10-ந் தேதி சஞ்சீவி அறையில் இருந்தபோது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் தங்களை கேரளா மற்றும் மதுரையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டனர்.
சஞ்சீவியிடம் நீங்கள் இரிடியத்தை மறைத்து வைத்து பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கூறி அவரை மிரட்டினர். பின்னர் அவர்கள் விசாரணை என்ற அடிப்படையில் சஞ்சீவியை அவரது காரில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மிரட்டி அழைத்து சென்றனர். அங்கிருந்து அவரை கோவைக்கு கடத்தி வந்தனர். காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.
அங்கு கேரளாவைச் சேர்ந்த சிபின் என்பவர் தான் கேரள போலீஸ் எனக் கூறிக் கொண்டு அங்கு வந்தார். அவருடன் கிப்சன், சமீர் முகமது ஆகியோரும் வந்திருந்தனர். இவர்கள் 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ. 30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை ஏற்பாடு செய்து தருவதாக கூறினார்.
பின்னர் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டனர். மேலும் அவர் அணிந்திருந்த 16 பவுன் தங்க செயின், 10 பவுன் கைச்செயின், 4 பவுன் மோதிரம் உள்பட 30 பவுன் தங்க நகைகளை மிரட்டி பறித்தனர். பின்னர் அந்த கும்பல் சஞ்சீவியை காரில் ஏற்றி சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள டோல்கேட் அருகே இறக்கிவிட்டு விட்டு ரூ.30 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து விட்டு அழைக்குமாறு கூறி விட்டு சென்றனர்.
இது குறித்து சஞ்சீவி கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து கேரளாவை சேர்ந்த சிபின், கிப்சன், சமீர் முகமது மற்றும் தஞ்சையைச் சேர்ந்த குமார் என்ற மீன் சுருட்டி குமார் (வயது 42) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 124 கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- உறவினரை பார்க்க தனது மொபட்டில் தாதகாப்பட்டியில் இருந்து நெத்திமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- திருமண மண்டபம் அருகே அவரிடம் இருந்து மர்ம நபர் நகைகள், பணம் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி கேட், நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் கடந்த 5- ந் தேதி உறவினரை பார்க்க தனது மொபட்டில் தாதகாப்பட்டியில் இருந்து நெத்திமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அன்னதானப்பட்டி எஸ்என்எஸ் திருமண மண்டபம் அருகே அவரிடம் இருந்து மர்ம நபர் நகைகள், பணம் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சேலம் அம்மாப்பேட்டை, அல்லிக்குட்டை, சத்தி யமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.
சர்க்கரை வியாபாரி யான இவர் மீது ஏற்கனவே
இரும்பாலை, கொண்ட
லாம்பட்டி, அன்னதா னப்பட்டி போலீஸ் நிலை யங்களில், தனியாக செல்லும்
காதல் ஜோடி மற்றும் இளம்பெண்களை பின் தொடர்ந்து சென்று, ரகசி யமாக படம் பிடித்து, அவர்களை மிரட்டி நகைகள், பணம் பறித்த வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது மேலும் 3 பெண்கள் அளித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பெண்களிடம் நகைகள், பணம் பறித்த வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள அவரை அன்ன தானப்பட்டி போலீசார் காவலில் எடுத்து விசா ரணை செய்ய கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை ஏற்று நீதிபதி, அவரை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி சரவணனிடம் இளம்பெண்கள் பாலியல் புகார்கள், வழிப்பறி தொடர்பாக விசாரித்தனர்.இதனையடுத்து அவரிடம் இருந்து 2 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
- விழுப்புரம் அருகே வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அனந்தபுரம் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நரசிங்கனூர் கிராமத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி ஜெயராஜ் என்பவரின் மகன் டான்கேரேஜ் (வயது 30) என்பவர் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த 16 பவுன் தங்க நகைகள், 2 எல்.இ.டி. டெலிவிஷன் திருடு போயிருந்தது. இது குறித்து கஞ்சனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கஞ்சனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம் போலீசார் லட்சுமி நாராயணன், திருநாவுக்கரசு, செல்லப்பன், ஜெகதீசன் ஆகியோர் அனந்தபுரம் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சில வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதில் சந்தேகப்பட்டு தொடர்ந்து விசாரணை செய்தனர். அப்போது மேற்படி திருட்டில் அவர்கள் ஈடுபட்டிருந்ததும் நகைகள் மற்றும் டிவிக்களை கொள்ளை அடித்ததும் தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா வாணியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் மகன் அருள்ராஜ் (25), பயத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமு (24), குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன் நல்லசிவம் (20) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவரிடமிருந்து 16 பவுன் நகைகள் மற்றும் 2 எல்.இ.டி. டெலிவிஷன்களை கைப்பற்றினர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மற்றும் லால்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேலவாளாடி, வாளாடி, புறத்தாக்குடி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக, தனியாக நடந்து சென்ற பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக 2 போலீஸ் நிலையங்களிலும் அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் நபரை பிடிக்க திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்படி லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜசேகர் மேற்பார்வையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நேற்று திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருங்களூர் பிரிவு ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் திருச்சி அண்ணாசாலை கைலாஷ்நகர் 3-வது கிராசை சேர்ந்த சுப்பையா மகன் சுரேஷ்குமார்(வயது 34) என்பதும், புகைப்பட கலைஞரான அவர் சொந்தமாக கேமரா வைத்து திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்து கொடுக்கும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. அந்த தொழிலில் போதிய வருமானம் கிடைக்காத நிலையில், ஆடம்பரமாக வாழ நினைத்த அவர் குறுகிய காலத்தில் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த சில நாட்களாக தனியாக சென்ற பெண்களிடம் தங்க சங்கிலிகளை பறித்து சென்றதும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க நம்பர் பிளேட் இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றதும், விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 30 பவுன் நகைகளை மீட்டனர். பின்னர் அவரை திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-3 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட புகைப்பட கலைஞரை கைது செய்த இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையிலான தனிப்படை போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிரபல நகைக்கடையில் தினேஷ் ரானா என்பவர் சேல்ஸ் மேனாக பணியாற்ரி வந்தார். நான்கு நாட்களுக்கு முன் தினேஷ் கடையில் உள்ள பல கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளுடன் தலைமறைவாகினார். இதுகுறித்து கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தினேஷ் சத்ரா பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சத்ரா கிராமத்திற்கு சென்ற போலீசார் அங்குள்ள உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர். அதில் ரம்தேயோ ரானா என்பவர் வீட்டில் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முக்கிய குற்றவாளியான தினேஷ் ரானா தலைமறைவாகி உள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்